Skip to main content

Posts

Featured

மனிதர்களும் விலங்குகளும் தெய்வங்களும்

'போயாக்' சிறுகதைத் தொகுப்பைப் பற்றி... எட்டுச் சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பின் சரிபாதி கதைகளில் பால்யத்தின் உள்கூடு வெளிப்பட்டிருக்கிறது. அதாவது கதாப்பாத்திரங்களின் பால்ய நினைவேக்கங்கள் ஸ்திரமான கட்டுமானத்திற்குள் உள்ளோடியிருக்கின்றன. ‘மசாஜ்’ கதையில் /எனக்கு அப்பா ஒப்பாரியை ஊளையிடும் சத்தம் கேட்டது/, ஜமால் கதையில் /ஜமாலின் முகத்தில் அம்மாவின் கண்ணீர் இருந்ததைச் சொன்னால் அமீர் நம்பப் போவதில்லை/ என்று இவ்விரு கதைகளிலும் மையப் பாத்திரங்களுடைய பெற்றோர்களின் கடந்தகால நினைவை ஞாபகப்படுத்துவதன் வழி கதை முடிகிறது. ‘வண்டி’ கதையில் பால்யத்தில் ஏற்பட்ட ரணத்தின் துளிகளை மரியதாஸ் பாத்திரம் தன் மகனின் பால்யத்திலும் கையளிக்கிறார், ஆனால் இறுதியில் நடப்பது வேறு. ‘வெள்ளைப் பாப்பாத்தி’ கதையில் நேரடியாக பெண் குழந்தையொன்றின் சிறுசிறு மனக்கிலேசங்களும், அழகியல் தரிசனங்களும் கதையாக்கப்பட்டிருக்கிறது. ‘நாகம்’, ‘யாக்கை’, ‘பேச்சி’ கதைகளில் மையப்பாத்திரங்களின் நினைவுகளைத் துணைப் பாத்திரங்கள் பகிர்வதாக உள்ளது. * மசாஜ், யாக்கை ஆகிய இரண்டு கதைகளிலும் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களின் தன்மைகளும், ...

Latest posts

தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன்

தானியங்கி

ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் - பகிர்வு

கங்கு - சிலப் பகிர்வுகள்

அந்தியில் திகழ்வது - எதிர்வினைக்கு எதிர்வினை

அந்தியில் திகழ்வது - தன்னை மட்டுமே குறித்தான பிரதானம்

ஞானம் தேடி

நவீனக் கவிதைகளில் தந்தைகள் - பகுதி 1

கட்டைக்கால் பெரியப்பா