தானியங்கி

 



 

தினந்தோறும் மெட்ரோவில்

அமைதியின் உருவாய் பயணிக்கிறோம்

யாரும் யாருடனும் பேசிக்கொள்ளமாட்டோம்

அறிவிப்புகள் ஒலிக்க

இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டால்

விறுவிறுவென்று வெளியேறுவோம்

அங்கு குரல்வலையின் வேலை

நெருக்கி நிற்பவர்களிடம்

எக்ஸ்க்யூஸ் மியை உதிர்த்து

வழியை உருவாக்குதுதான்

 

இறங்குவோம்

ஏறுவோம்

நகரும் அப்பயணச் சிறையில்

உண்மையில் எங்களுக்கு

ஒருவரையொருவர்

தெரிந்துகொள்ள வேண்டிய

அவசியங்கள் இருந்ததேயில்லை

பெட்டிகளின்

உள்ளேயும் சரி

வெளியேயும் சரி.


Comments