ஞானம் தேடி
Illustration ~ Melinot Aline
இப்படியெல்லாம் இருந்தால் உருப்படமாட்டாய்
விழுகின்ற இலை
உன்மீது பட்டால் ஞானமாவாது கிட்டும்
அதற்கு வழி பார் என்றான் நண்பன்
ஒரு மரத்தின் அடியில் நீண்டநேரம்
நின்றவனின் தலையில்
இலையொன்று மோதியது
என்ன யோசித்தான் என்று தெரியவில்லை
மரத்தை பிடித்து குலுக்க
விழுந்த அத்தனை ஞானங்களையும்
சாக்கில் சுருட்டி தலைமறைவானான்
எப்படியோ
நல்லது நடந்தால் புண்ணியம்தானே.
Comments
Post a Comment