பயங்கரம் முடிந்த பின்னால் நடக்கும் கதை
டிராஃபிக் சூழ்ந்த சாலையின்
பேருந்து நிறுத்தத்தில்
கைத்தடியுடன் நின்றிருந்த வயோதிகர்
ஊருக்கு புதியவரென்று
லிஃப்ட் கேட்டு ஏறினார்
வண்டியை செலுத்தியவாறே
இங்கு நடந்தேறிய பயங்கரங்களை
நரைமயிர் ஒட்டிய காதில்
கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினேன்
இதையெல்லாம் சரிசெய்யத்தான் தம்பி
இங்கு வந்தேன் என்றவர்
தன்னைக் கடவுளென்றார்
சடன் பிரேக் அடித்து
திடுதிடுவென இறங்கி
அவரின் வேட்டியை விலக்கி
உள்ளாடையை கழட்டினேன்
அவர் அசந்து சுயத்தை அடைவதற்குள்
தேங்கியிருந்த சாலைநீரில் நனைத்து
கையில் திணித்தேன்
ஏய் கிழட்டுக் கபோதி,
நாளைக்குள் இதை காயவைத்து
என்னிடம் காட்டு
உன்னை
கடவுள் என்று ஒப்புக்கொள்கிறேன்.
வக்காளி - இப்படிக்கு குளுகுளு சென்னை
ReplyDelete