ஒரு சிறிய பிரிவு

இளங்கூதலில்
ரயில்வே நிலையத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்
முன்பெல்லாம் 
அவள் என்னுடன் இருப்பாள்
கைகோர்த்து செல்வோம்
பெரிதாக மனித நடமாட்டம் இருக்காது

இன்று பெருந்திரள்
தனியாக இருக்கிறேன்
ஆள்நடமாட்டம் குறைய குறைய
இருளுடன் பேச்சுக்கொடுத்தேன்

உனக்கோர் ஒளி தேவை
எனக்கு இறுகப் பற்ற கை

பூரணச்சந்திர நாளில் 
காண்போம் கரிக்கிருட்டே

தற்போது 
இந்த சிகெரெட்டின் 
செங்கங்கு
சுருங்கும் 
இறுதி வேனல் வரை
உடனிருக்கிறேன்

- தமிழ்மணி












Comments

  1. அன்பில் தொடங்கி அன்பில் முடிப்போம். 🧡

    ReplyDelete

Post a Comment