டிசம்பர்


இந்த டிசம்பர்
வெயிலோடு பிறந்திருக்கிறது.

கடவுளின் ஒளியால்
டிசம்பரில் பிறந்தவர்கள்
ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு 
குறைகளேதும் இல்லையென்றில்லை.
அவர்களுக்கு ஒரு சுமை காத்திருக்கிறது.
அவர்களில் யாரை சிலுவை தேர்ந்தெடுக்குமோ?
மூன்றாம் நாளுக்கு யார் சரியான நபரோ?
கடவுளாக மாறப்போவது யாரோ?

'முள் கிரீடத்தை வணங்கி
இந்நாளைத் தொடங்குங்கள்'
என்றொரு கோஷத்தை 
அவர்கள் முன்னே நிறுத்தினேன்.

அங்கொருவர் இந்தக் காலையை
ஒரு செம்முளரியின் வாடையை 
முகர்ந்து தொடங்கினார்.

அவரே கடவுள்.


















Comments