போர்


காகத்தின் கரைதல்
விடியல் என்று சொல்கிறது
காகத்தின் கரைதல்
உணவு கொடு என்கிறது
காகத்தின் கரைதல்
கூட்டிற்கு குச்சிகள் தேடுகிறது
காகத்தின் கரைதல்
மின்கம்பத்தின் மின்தாக்கி சாகிறது
காகத்தின் கரைதல்
சாவிற்கு ஒப்பாரி பாடுகிறது
காகங்கள் தன் பாதையில்
குயில்களை அனுமதிக்கின்றன
இந்த குயில்களுக்குதான்
காகங்களை விரட்டியடிக்க 
எத்தனையெத்தனை வழிகள்

★★★

நிறங்கள் ஒன்றாகயிருப்பதால்
யுத்தங்கள் 
நிசப்தமாக மூச்சுவிடும் என்பதில்லை
இனிய குரல்கள்
காற்றின் காதுக்கு 
இரகசியங்களைக் குழைத்து 
ஊட்டிவிட்டுக் கொண்டே இருக்குமல்லவா!

★★★

சதாகாலமும் கூவிக்கொண்டே இருக்கும்
ஒரு அகன்ற நிலப்பரப்பை
எனக்குத் தெரியும்
கூவுதலுக்கு முன்
அங்கோர் கரைதல் 
புதைந்திருப்பது 
யாருக்குத் தெரியும்.

★★★

மேலும் 
காகத்தை திருடனாக்கிய
கதையில்
புத்திசாலி 
நரி இல்லை
கதைசொல்லியின் 
சுவையுணர்ந்த 
நாக்கு

★★★

கூமுட்டைகள்
முட்டைகளாவதற்குள்
கூட்டை
மீட்டு

Comments

Post a Comment