கேள்வி
இந்த டேபிள் ஃபேன்
உர்ர்ர் என்கிறது
அமர்த்திவிட்டு
கம்பியைக் கழட்டி
இறக்கைகளை
ஒவ்வொன்றாய்
வீசியெறிந்தேன்
பறவைகளை விட
உயரப் பறந்தது
மேகங்களுக்கும்
மேல் சென்றது
பூமியைத்
தாண்டியது
விண்வெளியில்
எங்கோ வெள்ளொளியாய்
பிரகாசித்தது
இப்போது
கூண்டுக்குள்
இருக்கும்
அமைதியை
எப்படி காப்பாற்றுவேன்?
அமைதிக்கு
உர்ர்ரென்றோ புர்ர்ரென்றோ
சைகையிடத் தெரியாதே.
Comments
Post a Comment