தனித்த மரம்
இலை பிய்யும் ஓசை
கேட்குமளவில் அதன் தனிமை
கிளையில்
எதையோ உற்றபடி
ஓணான்
என்
கண்கள்
சூழலை
நோக்கின
இடையில் மெல்லிய கண்சிமிட்டல்
ஓணானின் தடம் அங்கில்லை
இதுதான் தவத்தை கலைக்கும்
சிறு அசைவா?
கலைந்த தவம்
அதனுடையதா?
என்னுடையதா?
கலைத்தது
நிச்சயம்
மரத்தினுடைய
நெடுந்தவமே.
Comments
Post a Comment