துற அல்லது இற

மரணம் சம்பவிக்கும் மாலைப்பொழுதில்
இலைகள் புதிதாக துளிர்த்தன

கொழுந்தின் துவர்ப்போடு 
மரணத்தை அழைத்தேன்

மரப்பட்டைகளின் இடுக்குகளில்
துர்சம்பவத்தை அடைக்கவா?

கணுவிடைப்பகுதிக்குள் வைத்து பூட்டவா?

செவ்வெறும்பின் கால்களுக்குள்ள
சுதந்திரம் எனக்கேன் இல்லை

தன்போக்கில் உலாத்துகிறது

ரம்மியமான அந்திமகாலத்தில்
இலைகளின் ஒலி யென்னை 
அழைக்கிறது

'வா அருகே வா'

இதோ வந்துவிட்டேன்

'துற'

வாழ்வை துறந்தேன்

'இற'

அது எப்படி?



- தமிழ்மணி




Comments