அதிகாரம்


புத்தன் யாவற்றையும்
உள் வாங்குகிறான்

ஒளி வீசும் பெருந்தலை
உவப்பில்லை

என்னைப்போல அமர்
உட்கார்ந்தேன்

கண்களை மூடு
மௌனம் விரிந்தது

நடந்து பழகு
கால்களில் சாலை

புலால் உண்ணாதே
அதிகாரம் எய்தான்

புத்தனின் தலையை வெட்டியெடுத்து
சட்டியிலிட்டு சாப்பிட்டேன்

ருசி 

முண்டம் 
அய்யனார் சாமிக்கு


- தமிழ்மணி





- தமிழ்மணி

Comments