அவதூறு
ஹாரன் ஒலிகள் ஒன்றுடனொன்று
உரையாடிக்கொள்கின்றன
மறந்திருந்தன
சூழலை
அங்கே மனிதர்களும்
உரையாடிக்கொண்டு இருந்தார்கள்
ஒப்பனைகளாயிருந்தது வாதம்
பேருந்து நிலையத்தில் மனிதர்களின்
பேச்சுகள் பொய்த்துப் போகிவிட்டது
கருஞ்சாலையிலோடும் பேருந்தின்
சாளரக் கண்ணாடிகள் தடதடத்துப் பேசுகின்றன
'அமைதியாய் இருங்கள்
எதிர் வரும்
மற்றொரு பேருந்தின் ஹாரன்
இப்பேருந்தின் ஹாரனோடு
உரையாடுவதை ஒட்டுக்கேட்கலாம்'
ஹாரன்கள் மனிதனை
அவதூறின் குரல் என்கின்றன
நிறுத்ததில்
மிதிவண்டியின்
பெல் சத்தம் கேட்டும்
வழிவிடாது
தான்தோன்றியாய் ஒருவன் போகிறான்
'டிங்டாங்'
'டிங்டாங்'
இன்னொரு மிதிவண்டியின்
'பெல்'
அந்த மிதிவண்டியின்
'பெல்'லிடம்
சொல்லியதைக் கேட்டுவிட்டேன்
'மனிதன் அவதூறின் குரல்'
'டிங்டாங் டிங்டாங்'
அன்றிரவு
ஹாரன்கள்
களவாடப்பட்டிருந்தன
- தமிழ்மணி
Comments
Post a Comment