உதய இடர்


ஒரு மாதிரி யிருக்கிறேன்

மாதிரியாய் இல்லை

சூர்யோதயத்தின் போது 
நான் இருக்கமாட்டேன்

கருக்கலில் ஓடிவருவேன்

மூளைக்குள் பவுசு படிந்து கிடக்கிறது

ஆசாரியின் திருப்புளி 
ஓட்டைப்போடும் துவாரத்தில்
குந்தியிருக்கிறேன்

குச்சுவீட்டு அம்பலத்தான் 
நேற்றுத் திண்ண ஈசல் குழம்பில்
மிதந்து கொண்டிருக்கிறேன்

ஒட்டடையாக கூடியுள்ளேன்

கூடியுள்ள கூட்டம் 
நெரிசலற்றது

சாமத்தில்
சனமற்றது

கூட்டம் நான்
நெரிசல் ஆனேன்

கரிய யிருள் 
அப்பிக்கொண்டு
நீல ஆகாசத்தின்
கிழக்கு நோக்கினேன்

சிறுத்தையோட்டம்

"உதித்து விடாதே"


- தமிழ்மணி










Comments