ஜனனம்
தட்டச்சுப்பொறிகள் சிரசிற்குள் அமர்ந்து சடுகுடு ஆடுகின்றன
நீ ஒவ்வொருமுறை தட்டும்போதும் அதிர்வுறுகிறேன்
நிதர்சனப்போக்கு என் முகத்தைவிட்டு
இறங்கி ஓடிவிட்டது
கனவுகளில் இருக்கிறேனோ?
கானலின் பாதையில் இருக்கிறேனொ?
வீட்டின் மூலையில் தட்டச்சு இயந்திரம்
களைப்புணர்வுடன் துயில்கிறது
எனது நீண்ட நித்திரை அதனுள் அகப்பட்டுள்ளது
மாயசுத்தியால் இயந்திரத்தை உடைத்தேன்
உடைவு அபூர்வம்
உடைந்தது
என் குட்டி
மூளை அதனுள்
'நீ எப்போதும் இங்குதான் இருக்கிறாயோ?'
எப்போதும் இல்லை
'அப்படியென்றால்'?
நீ பிறந்ததிலிருந்து
'நான் எப்போது பிறந்தேன்'?
இனிதான் பிறப்பாய்
- தமிழ்மணி
Comments
Post a Comment