'அந்த'

"அந்த"


அதை 'அந்த' பேருந்து என்றே சொல்லி பழக்கப்பட்டுவிட்டார்கள்

அந்த பேருந்தினுள் நானும் இருந்தேன்

நான்காவது இருக்கையின் 
சாளரத்தின் பக்கம் ஒதுங்கியொடுங்கி வேடிக்கைப் பார்த்தேன்

கரம்பை மண்ணில் தலையைத் தொங்கப்போட்டிருந்தன சூரியகாந்திகள்

முன்னோக்கிப் போக
முற்காடுகளின் கூடாரம்
காற்றின் ஈரப்பதத்தை மிடறின கருவேலயிலைகள்

என்னருகே யாரும் அமரவில்லை
காற்றும்தான்
பேருந்திலும்
என்னைத்தவிர யாருமில்லை

ஒரு சொட்டு வியர்வைத்துளியாய்
உருமாறி 
காற்றில் புகுந்து 
உவர் ஈரப்பதமானேன்

என்னையும் கருவேலயிலைகள் இழுத்துக்கொண்டன
இதுவே சிறந்தயிடம் 
ஒளிந்துகொள்ள

'அந்த' பேருந்து இருக்கைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தது

மறைந்துவிட்டது 
அல்லது
காணாமல்


- தமிழ்மணி


Comments

Post a Comment