குரைப்பொலி
எதுக்களித்து கொண்டேயிருந்தது குரல்
தொண்டையில் வலி
எச்சிலை விழுங்க முடியவில்லை
காய்ச்சலின் அறிகுறியிது
சரியாக தூக்கமில்லாமல்
இரவில் புரண்டு புரண்டுப் படுத்தேன்
இருமினேன் தெருநாய்களெல்லாம் கூடிக் குரைத்தது
எழுந்தவுடன் கண்ணாடிப் பார்க்கும் சாதாரணன் நான்
கழுத்தில் வார்ப்பட்டைத் தொங்கியது
யார் இதை மாட்டியிருப்பார்?
கூர்நாசிகளையுடைய முகத்தை நெருக்கத்தில் பார்த்தேன்
எனது குரல் குரைப்பொலியாகியிருந்தது
என் கழுத்துச் சங்கிலியை இழுத்துக்கொண்டு வீட்டின் வெளியே உள்ள உலகத்திற்கு கூட்டி வந்தது ஒரு கை
"முயல் வேட்டைக்கு போலாமாப்பு?"
நான் சிறுநீர் கழிக்க போஸ்ட்மரம் தேடினேன்
- தமிழ்மணி
("உவர்" சிவசித்துவிற்கு)
Hello Valthukal
ReplyDelete