மனைவிக்குத் தெரியாமல் கவிதை எழுதக்கூடியவர்
"மனைவிக்குத் தெரியாமல் கவிதை எழுதக்கூடியவர்
அவர் மனைவிக்குத் தெரியாமல்
கவிதை எழுதக்கூடியவர்
எழுதிய தாள்களை பெரிய அலமாரியில் அடுக்கி வைத்துள்ளார்
அதிலிருந்து ஒவ்வொருநாளும் சில கட்டுகளை உருவி அடுப்பெறிப்பாள் மனைவி
சர்ரியலிசக் கவிதைக் கட்டுகள் சோறாக்க,
ஹைக்கூக் கவிதைக் கட்டுகள் விருந்தாளிகளின் தேநீருக்கு,
குழந்தைப் பேண்டு வைத்ததை அள்ள அவரின் போஸ்ட்-மார்டனிசக் கவிதைத் தாள்
ஒருநாள் மனைவிக்கு தெரியும்படி கவிதை எழுதினார்
அப்போதிலிருந்து இப்போதுவரை அவரால் நேர்த்தியான கவிதைகளை எழுத முடியவில்லை
அவரை மனைவிக்குத் தெரியாமல் கவிதை எழுத யாரேனும் சொல்லுங்களேன்.
- தமிழ்மணி
Comments
Post a Comment