வாழ்வு
கருமயிர்களுக்குள்
செம்பட்டைத்தட்ட தொடங்கிய காலத்தில்
வேப்பமரத்தைக் கூர்ந்தேன்
அது பச்சை இலைகளுக்கு ஊடே மஞ்சளை செரித்திருந்தது
சில துருயேறிப்போய் இருந்தன
மரப்பட்டைகளுக்குள் ஊர்ந்து
உச்சிக்கு சென்றேன்
மெல்லியக் காற்றின் உரசல்
தலைமுடி அசைந்தது
இலைகள் அசைந்தது
மயிரும் இலையும்
ஒருசேர விழ
அதிர்ந்தது நிலம்
நிலநடுக்கம்
மயிர்களைக் கோர்த்து
கயிறு செய்து
தலை நுழைத்தேன்
மரத்தை நிலம் விழுங்கியது
என்னை நான்
நானோர் மயிர்
இஃதோர் மயிர் வாழ்வு
- தமிழ்மணி
Comments
Post a Comment