காத்திருத்தல்


கொட்டாவி 

சூடும் குளிரும் கலந்த காற்று

இருசக்கர வாகன ஓட்டம்

சுத்தியல் சத்தம்

ஜோடி மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள்

புளியமரம்

நடைமேடையில் எண் 16ல் நிற்கிறேன்

காத்திருப்பது புதிய செயல் அல்ல

நீங்கள் கழிவரைக் குழிக்குள்ளிருந்து கட்டெறும்பு மேலேறி வெளியேறும் வரை
மலத்தை அடக்கி வைத்திருக்கிறீர்களா?

நிழலோடு பேசியபடி 
ஒரு செங்குழவியாய் மனதை அலையவிடுகிறேன்

பகலை உற்று கவனிப்பதைவிட 
கவிதை யெழுதுவது 
கடினம் என்கிறான்
நிழல் 

கவிதை எழுதுவது சுலபம் நண்பா

உள்ளங்கால் வியர்வையோடு செருப்பு அணிந்துபார், ஒத்துக்கொள்வாய். 

பிறகு
இரயில் ஓநாயைப்போல் ஊளையிட்டுக்கொண்டே வந்தது.


- தமிழ்மணி




Comments

Post a Comment