பழக்குதல்


புறப்பட்டது கூட்ஸ்

யாருமில்லாத ரயில்வே நிலையம்

மத்யானவேளையில் நெல்மணிகளைத்
தேடிவந்தன புறாக்கூட்டம்

எத்தனைப் புறாக்கள் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டிருந்தேன்

எங்கள் ஊரார்கள் புறாக்கறி ப்ரியர்கள்

என் ஆடையை அவிழ்த்து நிர்வாணம் பூண்டேன்

நெல்மணிகளை உடலில் பூசி புறாக்களின் மத்தியில் அமர்ந்தேன்

அவற்றை மனிதக்கறிக்கு பழக்கினேன்

என்னைத் தின்று முடித்துவிட்டு ஊர்ப்பக்கமாக பறந்தன


- தமிழ்மணி






Comments