க்ரீச்....க்ரீச்...

"க்ரீச்...க்ரீச்"...


'க்ரீச் க்ரீச்' சத்தத்தைச் சுமந்தபடி துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது எலி

கொன்று எறிந்துவிட்டேன்

இரவில் கனவுகளில் மூளையை எலி உருட்டுகிறது

அம்மாவின் முகம் கூர்மையாகி மீசை முளைத்திருந்தது

அப்பாவின் புட்டத்தில் வால்

அவர்கள் கொஞ்சம் கொஞ்மாய் உருமாறத் தொடங்கியிருந்தார்கள்

எதிர்வீட்டு 'சார்லஸின்' பூனை 'டிங்' ஒவ்வொருநாளும் என்னை வெறுப்பில் பார்க்கும்

அதன் சாம்பல்நிறக் கண்களுக்கு நான் எலியாய் இருந்தேன்

வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து 
பூனைசகாக்களோடு படையெடுத்தான் டிங்

என் இறைச்சியை முழுவதுமாய்த் தின்று
தீர்த்தன அவை

கொன்று புசித்துவிட்டன(ர்)

என் கடைசி முனகல் அவை விட்டுவைத்த இடது காதிற்குள் இப்படி கேட்டது

'க்ரீச் க்ரீச்'



- தமிழ்மணி










Comments

  1. நீங்கள் எழுதியதிலேயே சிறந்த கவிதை👏✌🎯

    ReplyDelete

Post a Comment