இரவு - 30 சென்டிமீட்டர்
30 சென்டிமீட்டர் நீளமுள்ள இரவில்
நடந்து செல்கிறோம்
சித்தெறும்பின் கடியில் வீங்கிய மேல்தோல் ஒரு குட்டி மலை
மலை அடிவாரத்தில் கஞ்சாத்தோட்டம்
காய்ந்துபோன போதையே சிலிர்த்து எழு
31வது சென்டிமீட்டரில் ரசப்பூடு கொண்டைத் தலை
"ஆசையைத் துறந்து ஆதி அற்புதம் தேடு மகனே"
துறவியின் தலையை வெட்டி எரிந்துவிட்டு
பின்னோக்கி நடந்து இரவுக்குள் புகுந்தோம்
"போதை போதை போதை"
- தமிழ்மணி
அட்டகாசம்
ReplyDelete