000
நீங்கள் எல்லோரும் சொல்லும்படி அவரில்லை
அவருக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இருக்கிறது
நடுசாமத்தில் அவர் குப்புறப்படுத்து உறங்குவார்
வலது கையால் சாப்பிடுவார்
இடது கையால் குண்டி கழுவுவார்
கால்களைக் கொண்டுதான் நடப்பார்
கண்களைக் கொண்டுதான் பார்ப்பார்
கவிஞரே, என்றழைப்பவர்களை சட்டை செய்யமாட்டார்
அதோ அந்த மரத்தடியில் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறாரே
அவர்தான் நீங்கள் தேடிவந்த மனிதர்
உங்களைப் போன்றுதான் இருப்பார் அவர்
உங்களைப் போன்றுதான் இருப்பார்
உங்களைப் போன்றுதான்
- தமிழ்மணி
Comments
Post a Comment